Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு 3-வது பிரகாரத்தில் தேரோட்டம் நடந்தது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இவ்விழா வரும் 17-ம் தேதி வரை நடை பெறும். விழாவில் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
ஆண்டுதோறும் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடை பெறும். ஆனால் கரோனா பரவல் நடைமுறைகள் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி கோயிலுக்கு உள்ளே 3-ம் பிரகாரத்தில் தேரோட்டம் நடந்தது. காலை 10.30 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினார்.
ஆடித்தபசு நாளை (ஆக.11) நடைபெறுகிறது. திருக்கல்யாண உற்சவம் ஆக.12-ம் தேதி இரவு நடைபெறும். இதை யூடியூப் இணையதளத்தில் நேரடி ஒளி பரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்து வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT