Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
பரமக்குடி அடுத்த எமனே சுவரம் கிறிஸ்தவ தெருவைச் சேர்ந்தவர் அருள். மனைவி தயாமணி. அருள் இறந்துவிட்ட நிலையில் தயாமணி பள்ளி ஒன்றில் சமையலராகப் பணிபுரிகிறார். இவர்களது மகன் டென்னிஸ் என்ற பூக்கா(16). தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். டென்னிஸ் வீட்டில் புறாக் களை வளர்த்து வந்தார். புறா ஒன்று பக்கத்து வீட்டு மாடிக்கு பறந்து சென்றது. அதைப் பிடிப்பதற்காக மாடிக்குச் சென்ற டென்னிஸ் கையை நீட்டியபோது மேலே செல்லும் மின்கம்பி மீது கை உரசி மின்சாரம் தாக்கியது. இதில் டென்னிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து எமனேசுவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT