Published : 10 Aug 2021 03:17 AM
Last Updated : 10 Aug 2021 03:17 AM

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

திருச்சி

திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் முன் அனைத்துத் தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களுக்கான 4 சட்டத் தொகுப்புகளையும், 3 வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத் திருத்தத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டச் செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏஐடியுசி சுரேஷ், ஐஎன்டியுசி வெங்கட்நாராயணன், எச்எம்எஸ் ஜான்சன், ஏஐசிசிடியு மகேந்திரன், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சிவசூரியன் ஆகியோர் பேசினர்.

இதேபோல, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x