Published : 10 Aug 2021 03:17 AM
Last Updated : 10 Aug 2021 03:17 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(30). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இவரது மாமியார் வீடு திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ளது. அங்கு மனைவியை பார்க்க இரு சக்கர வாகனத்தில் விநாயகமூர்த்தி நேற்று முன்தினம் மாலை சென்றார். பிறகு, நள்ளிரவு 11 மணியளவில் ஜோலார்பேட்டைக்கு திரும்பினார். நேற்று அதிகாலை வரை அவர் வீடு திரும்பாத தால் சந்தேகமடைந்த விநாயக மூர்த்தி யின் குடும்பத்தார் அவரை தேடி திருப் பத்தூர் வந்தனர். அப்போது, திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி எதிரேயுள்ள கற்பகம் கூட்டுறவு அங்காடி முன்பாக உடலில் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து நகர காவல் துறை யினர் நடத்திய விசாரணையில், விநாயகமூர்த்தி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்ற போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் விநாயகமூர்த்தி மீது வாகனத்தை மோதினர். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த விநாயகமூர்த்தி மயங்கி உள்ளார். உடனே, விபத்தை ஏற்படுத்திய அந்த நபர்கள் விநாயகமூர்த்தியை மீட்டு, அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்வ தற்காக தங்களது வாகனத்தில் அழைத்துச்சென்றனர்.
பாதி வழியில் அந்த நபர்கள் அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி, பணம், ஏடிஎம் கார்டுகள், வாட்ச், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு விபத்தில் மயங்கிய நிலையில் கிடந்த விநாயகமூர்த்தியை கற்பகம் கூட்டுறவு அங்காடி அருகே சாலையோரம் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT