Published : 09 Aug 2021 03:16 AM
Last Updated : 09 Aug 2021 03:16 AM
பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பொள்ளாச்சி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளில், நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளாத வியாபாரிகள் உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம். இடம் மற்றும் தொழில் செய்யும் இடத்துக்குரிய புகைப்படம், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல், ரேஷன் அட்டை நகல் மற்றும் வியாபாரம் செய்பவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு பிரிவை அணுகலாம். தங்களை சாலையோர வியாபாரிகளாக ஒருவார காலத்துக்குள் பதிவுசெய்து வங்கிகளின் மூலம் குறைந்த வட்டியில் ரூ.10 ஆயிரம் கடன் பெற்று, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT