Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

கழிப்பறைகளுக்கு கூடுதல் கட்டணம் : மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் புகார் :

மதுரை: மார்க்சிஸ்ட் கட்சி மதுரை மாவட்டச் செயலாளர் ரா.விஜயராஜன், மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு:

மதுரை மாநகராட்சி சார்பில் ஆரப்பாளையம், பெரியார், மாட்டுத்தாவணி ஆகிய பேருந்து நிலையங்கள், சுற்றுலா மையங்கள், வணிக நிறுவனங்கள், அறநிலையத் துறை கோயில்கள் என பல்வேறு இடங்களில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனக் காப்பகங்கள் செயல்படுகின்றன. இதை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் வாகனக் காப்பகங்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அதேபோல் மாநகராட்சிக்கு சொந்தமான கழிப்பறைகளிலும் கட்டண வசூலில் முறைகேடு நடைபெறுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x