Published : 08 Aug 2021 03:18 AM
Last Updated : 08 Aug 2021 03:18 AM

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - உள்ளாட்சித் தேர்தல் கருத்து கேட்புக் கூட்டம் : அமைச்சர்கள், கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பானக ருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றோர்

கள்ளக்குறிச்சி

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல்கள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்கேட்பு கூட்டம் விழுப்புரம் மற்றும்கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் பி.என்.தர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் மா.செந்தில் குமார், உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன், விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் ரா.மணி மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், விழுப்புரம்மக்களவை உறுப்பினர் டி.ரவிக் குமார் மற்றும் இதர கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

இரு கூட்டங்களிலும் பேசிய அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், “ நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக விரைவு வாக்குச்சாவடிப் பட்டியல்கள் கடந்த 5-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் அனைத்து கிராம ஊராட்சி அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தெரிவித்துள்ள மாற்றம் குறித்த கருத்துக்களை பரிசீலனை செய்து உரிய மாற்றங்களை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்வார்கள்.

வாக்குச்சாவடிகள் தொடர்பான கூடுதல் கருத்துக்கள் அல்லது கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் நாளைக்குள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் எழுத்து மூலம் தெரிவிக்கலாம். அனைத்து கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து ஆகஸ்டு 11 அன்று இறுதிவாக்குச்சாவடி பட்டியல்கள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9ஊராட்சி ஒன்றியங்களி ல் 9 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 180 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 412 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய 1,889 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில்9 ஊராட்சி ஒன்றியங்களில் 28 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 293ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 688 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 5,088 கிராமஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய 2,946 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x