Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM
துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரக் கோரி முதுகுளத்தூரைச் சேர்ந்த பெண் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
முதுகுளத்தூர் அருகே புளியங்குடியைச் சேர்ந்தவர் குமரவேல் (55). இவர் கடந்த 8 ஆண்டுகளாக துபாயில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்தார்.
விடுமுறையில் வந்துவிட்டு, 10 மாதங்களுக்கு முன்பு துபாய் சென்றார். இந்நிலையில் 26.7.2021 அன்று குமரவேல் இறந்துவிட்டதாக, அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குமரவேலின் மனைவி சண்முகவள்ளி, தனது மகன் முத்துக்குமார்(17) மற்றும் உறவினர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலாவிடம் துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தார்.
இதுகுறித்து சண்முகவள்ளி கூறியதாவது:
எனது கணவர் 26.7.2021 அன்று இறந்துவிட்டதாக உடன் பணிபுரிவோர் மொபைலில் தெரிவித்தனர். ஆனால் எப்படி இறந்தார் எனத் தெரிவிக்கவில்லை. எனது கணவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது குடும்பத்துக்கு நிவாரண உதவி கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment