Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது :

ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே சின்ன ஆனையூரைச் சேர்ந்த சக்தி முருகனை மேலக்கன்னிச்சேரியைச் சேர்ந்த முனியசாமி உள்ளிட்ட 6 பேர், 24.6.2021-ல் தாக்கினர். இதனையடுத்து 2 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

முனியசாமி உள்ளிட்ட 6 பேர் மீது பேரையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் முனியசாமி(21), மணிகண்டன்(21), நாகேந்திரன்(26), வழிவிட்டான்(46) ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட எஸ்பி இ.கார்த்திக் பரிந்துரைத்தார். அதை ஏற்று ஆட்சியர் உத்தரவிட்டார்.இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x