Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM
கமுதி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதியதில் கூலித் தொழிலாளி உயி ரிழந்தார்.
கமுதி அருகே புதுப் பட்டியைச் சேர்ந்த காளிச் சாமி(18), காளீஸ்வரன் (18), முத்து வழிவிட்டான் (20), மாரிச்சாமி (20) ஆகிய 4 பேரும் கமுதியில் உள்ள கடைகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்ததும், புதுப்பட்டிக்கு மாரிசாமியின் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பினர். அதே நேரம் கமுதி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த சாமுவேல் (55) கமுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். குடிக்கினியான் விலக்கு சாலை அருகே 2 பைக்குகளும் மோதின. படுகாயமடைந்த 5 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சாமுவேல் உயிரிழந்தார்.
இதுகுறித்து கமுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment