Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM
நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் சர்வர் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜூலை 31-ம் தேதி வரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங் களுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பதிவு செய்து வழங்கப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் பதிவாகும் கணக்கு வழக்குகள் அனைத்தும், சென்னையில் இயங்கிவரும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் உள்ள சர்வரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த சர்வரில் பராமரிப்புப் பணிகள் நேற்று தொடங்கின. இப்பணிகள் வரும் 30-ம்தேதி வரை நடக்கிறது. இத னால், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுதல், வரிவசூலிப்பு போன்ற பணிகள் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் மேற்குறிப்பிட்ட நாட் களில் நடைபெறாது. இப்பணிகள் முடிந்த பிறகே வரும் ஆக.2-ம் தேதி முதல் மீண்டும் வழக்கமான பணிகள் தொடங்கும். எனவே, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுவது அல்லது பதிவு செய்தல், வரி செலுத்துதல் போன்ற பணி களுக்காக பொது மக்கள் ஜூலை 28-ம் தேதி (நேற்று) முதல் 31-ம் தேதி வரை வேலூர் மாநகராட்சி தலைமை அலுவலகம் அல்லது மண்டல அலுவலகங்களுக்கு வரவேண்டாம் என வேலூர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல, திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார் பேட்டை, குடியாத்தம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக் கோணம், திருவண்ணாமலை உள்ளிட்ட நகராட்சிகளிலும் பிறப்பு- இறப்பு சான்றிதழ் பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT