Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு :

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் செம்மியமங்கலம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்டும் பணி, மருத்துவாம்பாடி கிராமத்தில் குடிநீர் தொட்டி கட்டும் பணி, தச்சாம்பாடி கிராமத்தில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமானப் பணி, மண்டகொளத்தூர் கிராமத்தில் தனிநபர் கழிப்பறை கட்டும் பணியை கூடுதல் ஆட்சியர் பிரதாப் ஆய்வு செய்தார். அப்போது அவர், நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் உள்ள பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பங்கேற்றார். அப்போது, ஒன்றியக் குழுத் தலைவர் ராணி அர்ஜுனன், மாவட்ட ஊராட்சி செயலாளர் அறவாழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், மோகனசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x