Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 20 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
மாவட்டத்தில் உள்ள பிற அணைப் பகுதிகள், இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
சேர்வலாறு- 48, மணிமுத்தாறு- 4.6, கொடுமுடியாறு- 30, அம்பா சமுத்திரம்- 6, சேரன்மகாதேவி- 3, ராதாபுரம்- 4, களக்காடு- 1.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,149 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,404 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 46 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைகளின் நீர்மட்டம் விவரம்: பாபநாசம்- 108.95 அடி, சேர்வலாறு- 110.17 அடி, மணிமுத்தாறு- 72 அடி, வடக்கு பச்சையாறு- 16.65 அடி, நம்பியாறு- 11.87 அடி, கொடுமுடியாறு- 29 அடி.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் பரவலாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 33 மி.மீ. மழை பதிவானது.
தென்காசியில் 31 மி.மீ., செங்கோட்டையில் 30, கருப்பாநதி அணையில் 24, அடவிநயினார் அணையில் 18, ஆய்க்குடியில் 14, கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 10, சிவகிரியில் 6, சங்கரன்கோவிலில் 1 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடனாநதி அணை நீர்மட்டம் அரை அடி உயர்ந்து 69.50 அடியாக இருந்தது. ராமநதி அணை நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 68 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் அரை அடி உயர்ந்து 63.98 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. அடவிநயினார் அணை யில் நீர்மட்டம் 124 அடியை எட்டியுள்ளது.
மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கரோனா ஊரடங்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை நீடிப்பதால் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT