Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM
மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி, நாமக்கல்லில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு, மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம், நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கங்கள் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளாக அரசு மணல் வழங்கவில்லை.இதனால் கட்டுமானப் பணிகள் அனைத்தும் பாதியில் நிற்கிறது. மணல் கிடைக்காமல் சாதாரண மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
அரசு எம்.சாண்டை பயன்படுத்தும்படி கூறுகிறது. ஆனால், அதற்கான தரக்கட்டுப்பாடு வழிமுறையையும் தெரிவிக்கவில்லை. அரசு மணல் குவாரியை தொடங்கினால் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மணல் கிடைக்கும். மணல் குவாரிகளை விரைவில் திறக்க வேண்டுமென தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT