Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM
அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர்(பொ) ஐயப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கட்டிட அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணு வியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கனிணி பொறியியல் ஆகிய 5 படிப்புகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த 5 படிப்புகளும் மொத்தம் 300 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர்.கல்விக்கட்டணம் ஓராண்டுக்கு ரூ.2,452 மட்டுமே.
வழக்கமாக, பத்தாம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இனசுழற்சி முறையில் கலந்தாய்வு வாயிலாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். தற்போது மாணவர் சேர்க்கை 9-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்."www.tngptc.in" அல்லது "www. tngptc.com" ஆகிய இணையதளங்கள் வழியாக வரும் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்கு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் உள்ளது. அங்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9442736992, 9585299529, 8098735554 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT