Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

கொல்லிமலையில் - பள்ளி, விடுதிகளில் அமைச்சர் கயல்விழி ஆய்வு :

கொல்லிமலை வாழவந்திநாடு வல்வில் ஓரி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப்பள்ளியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் பள்ளி, விடுதிகளில் போதிய வசதிகள் உள்ளதா என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

கொல்லிமலை வட்டம் செங்கரை ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளி, வாழவந்திநாடு வல்வல் ஓரி பழங்குடியினர் நல உண்டு, உறைவிடப்பள்ளி, ராசிபுரம் முள்ளுக்குறிச்சி அரசினர் மகளிர் விடுதி, ராஜபாளையம் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, நாமகிரிப்பேட்டை ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஆண்டகளூர்கேட் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி உள்ளிட்ட இடங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். அடிப்படை வசதிகள் மற்றும் புதிய வகுப்பறை கட்டுமானப் பணிகளை அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.

அப்போது, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு கல்லூரி படிப்பு, பாட பிரிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவியர் இணையதளம் வழியாக கல்வி கற்கின்றார்களா, கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை பார்த்து தெரிந்து கொள்கின்றனரா என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும், என அறிவுறுத்தினார்.

முன்னதாக 100 விவசாயிகளுக்கு தலா ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள மிளகு, காப்பிக் கொட்டை உள்ளிட்டவற்றை உலர வைக்கும் சோலார் உலர் கலன்களை அமைச்சர் வழங்கினார். சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், எம்எல்ஏ கு.பொன்னுசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) வி. ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x