Published : 16 Jul 2021 03:13 AM
Last Updated : 16 Jul 2021 03:13 AM
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா திருச்சி மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் சார்பில் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல, திருவெறும்பூரில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
துப்பாக்கித் தொழிற்சாலையில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பொறுப்பாளர் அருள்சேவியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிற்சாலை பொதுமேலாளர் சஞ்சய் திவேதி, பாதுகாப்பு அதிகாரி கார்த்திகேஷ் ஆகியோர், ஊழியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
பெல் தொழிற்சாலையில் ஐஎன்டியுசி சார்பில் பொதுச் செயலாளர் கல்யாணராமன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவாரூர் மாவட்டங்களிலும் காங்கிரஸ், பாஜக, தேமுதிக, தமாகா, விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், நாடார் உறவின்முறை சங்கம், நாடார் மகாஜன சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் காமராஜரின் சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
காரைக்கால் அம்மாள்சத்திரம் பகுதியில் உள்ள காமராஜரின் சிலைக்கு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏக்கள் பி.ஆர்.என்.திருமுருகன், பி.ஆர்.சிவா, மாவட்ட துணை ஆட்சியர் எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT