Published : 15 Jul 2021 03:15 AM
Last Updated : 15 Jul 2021 03:15 AM

ஆண்டியப்பனூர் நீர்தேக்க அணையை தூர்வார வேண்டும் : பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாஜக மேற்பார்வையாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆண்டியப்பனூர் நீர் தேக்க அணையை தூர்வார நட வடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாவட்ட செயற் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் அடுத்த பூங் குளம் புதூர் பகுதியில் பாஜக மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாஜக மேற்பார்வையாளர் வெங்க டேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வாசு தேவன், துணைத்தலைவர் மார்கண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்ன தாக ஒன்றியத் தலைவர் கருணாகரன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில், நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் நீர்தேக்க அணை கடந்த 1998-ம் ஆண்டு கடப்பட்டது. 216 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணையில் 30 சதவீதம் மட்டுமே தற்போது தண்ணீர் நிரம்பியுள்ளது.

ஆண்டியப்பனூர் அணையை தூர்வாரினால் 8 மீட்டர் அளவுக்கு தண்ணீர் முழுமையாக நிரம்பும். இதன் மூலம் ஆண்டியப்பனூர், மிட்டூர்,இருனாப்பட்டு போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் முழுமையாக பயன்பெறுவார்கள். திருப்பத்தூர் பகுதியைச் சுற்றியுள்ள 9 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும். இதனால், ஆண்டியப் பனூர் அணையை உடனடியாக தூர்வார வேண்டும்.திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு குடிநீர் பிரச்சினை தீர்க்க பாலாறு மற்றும் தென்பெண்ணை ஆற்று நீரை ஆண்டியப்பனூர் அணைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் முறையாக அளவீடு செய்து, 5 அடி அளவுக்கு தூர்வார வேண்டும். ஒரு முறை ஏரிகள் முழுமையாக நிரம்பினால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப் பில்லை.

சென்னை மண்டலத்துக்கு குடிநீர் பிரச்சினைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற அனைத்து பகுதிகளுக்கும் கொடுக்க வேண்டும். மேலும், சென்னையில் பூங்கா அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.2,500 கோடி நிதியை அனைத்து ஏரிகளையும் தூர் வாரி ஆழப்படுத்த பயன்படுத்த வேண்டும்.

ஆண்டியப்பனூரில் கடந்த 50 ஆண்டுகளாக சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. எனவே, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஆண்டியப்பனூர் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிப் பகுதிகளும் விரிவுப்படுத்திட வேண்டும்.

ஆண்டியப்பனூர் அணைக் கட்டு பகுதிகளில் மீன்பிடிப்பு உரிமையை ஆண்டியப் பனூர் மீனவர் சங்கம் அல்லது ஊராட்சி நிர்வாகத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x