Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
திண்டிவனத்தில் உள்ள நகராட்சி உழவர் சந்தையை கடந்த 5-ம் தேதி ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார். அப்போது உழவர் சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள முட்புதர்களை அகற்ற உத்தரவிட்டார். உழவர் சந்தையில் பழுதடைந் துள்ள ஒளிரும் விளக்குகள் மற்றும் தெருவிளக்குகளை மாற்றிடவேண்டும். உழவர் சந்தை சிறப் பான முறையில் இயங்கிடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உழவர் சந் தைக்கு வெளியே விவசாயிகள் கடைகள் அமைத்து பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
அடையாள அட்டையி னைப் பெற்ற விவசாயிகள் உழவர்சந்தையில் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, நகராட்சி மற்றும் உழவர் சந்தை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று திண்டிவனத்தில் சீரமைக்கப்பட்ட உழவர் சந்தையை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். தோட்டக் கலைத்துறை சார்பாக மாடி தோட்டம் அமைப்பதற்கு தேவையான வேளாண் இடு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து திண்டிவனம் பழைய பேருந்து நிலையத் தில் புனரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்படுவதையும், புதிய பேருந்துநிலையம் அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்தார்.
ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, திண்டிவனம் உதவி ஆட்சியர் அமித், துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, வேளாண் துறை இணை இயக்குநர் ரமணன், உழவர் சந்தை துணை இயக்குநர் கண்ணகி, வட்டாட்சியர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT