Published : 09 Jul 2021 03:16 AM
Last Updated : 09 Jul 2021 03:16 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு - 7,220 கரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தன : ஒரே நாளில் தீர்ந்துவிடும் என சுகாதார துறையினர் தகவல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு 4,500 கோவி ஷீல்டு தடுப்பூசிகளும், 2,720 கோவாக்சின் தடுப்பூசிகளும் நேற்று வந்தடைந்தன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி மருந்துகள் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் போடப் பட்டு வருகிறது.

இது தவிர 3 மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கும் தற்போது கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 3.35 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1.60 லட்சம் பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.70 லட்சம் பேருக் கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட் டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வந்தாலும் தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி முகாம்கள் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வந்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மாவட்டம் வாரியாக நேற்று முன்தினம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

கூடுதல் தடுப்பூசி வழங்குக...

அதன்படி, வேலூர் மாவட் டத்துக்கு 2,000 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளும், 1,120 கோவாக்சின் தடுப்பூசிகளும், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 1,500 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 800 கோவாக்சின் தடுப்பூசிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 1,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 800 கோவாக்சின் தடுப்பூசிகளும் நேற்று வந்தடைந்தன. இந்த தடுப்பூசி மருந்துகள் ஒரே நாளில் தீர்ந்துவிடும் என சுகா தாரத்துறையினர் தெரிவித்தனர்.

கரோனா தடுப்பூசி போடு வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கூடுதலாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கினால் மட்டுமே அனை வருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x