Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM

வைகை அணை நீர்மட்டம் உயர்வு : 65.5 அடியை எட்டியது :

தேனி

தொடர்மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 65.5 அடியை எட்டியது.

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே நீர்வரத்து சீராக இருந்ததால் கடந்த மே மாதம் நீர்மட்டம் 67 அடியை எட்டியது. பின்னர் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்கிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை விவரம் (மி.மீ.ல்):

ஆண்டிபட்டி-53.8, கூடலூர்-43.7, சோத்துப்பாறை-15, வைகை அணை-14.6 மி.மீ.

வைகை அணைக்கு விநாடிக்கு 1,355 கன அடி நீர்வரத்து உள்ளது. 769 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 65.5 அடியை எட்டி யுள்ளது. நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x