Published : 06 Jul 2021 03:14 AM
Last Updated : 06 Jul 2021 03:14 AM
தி.மலை/ வேலூர்/சோளிங்கர்/திருப்பத்தூர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், தி.மலை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் நேற்று திறக்கப்பட்டன.
கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் 2 மாதங்களுக்குப் பிறகு, ஜுலை 5-ம் தேதி (நேற்று) முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய வும், வழிபாடு செய்யவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.
அதன்படி, தி.மலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி வழங்கப்பட்டது.
முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக் கப்பட்டனர். தனி மனித இடை வெளியுடன் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், செய்யாறு வேதபுரீஸ்வரர், படைவீடு ரேணுகாம்பாள் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களும் திறக் கப்பட்டதால் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல், தேவாலயங்கள் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடும் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டு சிறப்பு தொழுகையும் நேற்று நடைபெற்றது.
வேலூர்
வேலூர் கோட்டை ஜலகண் டேஸ்வரர் கோயிலில் நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் மகா தீபா ராதனை நடைபெற்றது. வேலூர் கோட்டை மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினசரி இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் அடுத்த பாலமதி குழந்தை தண்டாயுதபானி கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்தை யொட்டி சிறப்பு அலங்காரம் செய் யப்பட்டிருந்தது.
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயில்கள் நேற்று அதிகாலை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில்கள் திறக்கப்பட்டதால் அதிகாலையிலேயே கோயில் முன்பாக திரண்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டத்திலும், திருப்பத்தூர் நகரிலும் உள்ள அனைத்து கோயில்களும் நேற்று அதிகாலை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், கிறிஸ்தவ தேவாலயங்கள், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் நேற்று திறக்கப்பட்டு சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
உணவகங்களில் அமர அனுமதி
உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீதம் இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவீதத்துக்கும் மேல் இருந்தால் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல், பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளில் 50 சதவீதத்துக்கு மேல் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி யில்லை. வியாபாரிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண் டும் என்றும் விதிகளை மீறும் வியாபார நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT