Last Updated : 03 Jul, 2021 03:13 AM

 

Published : 03 Jul 2021 03:13 AM
Last Updated : 03 Jul 2021 03:13 AM

சின்ன சொக்கிகுளத்தில் சிக்கி திணறும் வாகனங்கள் : மதுரை கோகலே சாலையின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படுமா?

மதுரை

மதுரை சின்ன சொக்கிகுளம் பகு தியில் நடைபெறும் பறக்கும்பால பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கோகலே சாலையில் செல்லும் வாகனங்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

கோரிப்பாளையம் மற்றும் தல் லாகுளம் பகுதிகளிலிருந்து நத்தம் சாலை, அழகர்கோவில் சாலை மற்றும் மேலூர் சாலைகளுக்குச் செல்லும் வாகனங்கள் இந்த ஒரு வழிப்பாதையில்தான் செல்ல முடியும். ஏற்கெனவே இச்சாலையில் பிடிஆர் சிலை அருகே ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க சாலை யை அகலப்படுத்த மாநகராட்சி முயன்றது. அங்குள்ள தனியார் வர்த்தக மையம் தொடர்ந்த வழக் கால் அப்பணி கிடப்பில் இருந்தது.

ஆனால் தற்போது நத்தம் சாலையில் கட்டப்படும் பறக்கும் பாலம், மாநகராட்சி அலுவலக மேற்கு நுழைவாயில் முன்பும், கோகலே சாலையிலும் இறங்கு வதால் அப்பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் கரோனா ஊரடங்கால் தொடர்ந்து பணி தொய்வில் உள்ளது. இதனால் தனியார் வர்த்தக மையம் முன்பு காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது ஊரடங்கு தளர்வுகளால் அச்சா லையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஷேர் ஆட் டோக்கள் அவ்விடத்தில் குறுக்கும் நெடுக்குமாக செல்வதால் வாகன ஓட்டுநர்கள் திண்டாடுகின்றனர். ஆம்புலன்ஸ்கள் செல்வதில்கூட சிரமம் உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறும்போது, ஒருவழிப்பாதையான கோகலே சாலையில் விசா ல்டிமால் அருகே தினசரி கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. நீண் டநேரம் ஊர்ந்துதான் செல்ல முடிகிறது. வளைவுப் பகுதியான அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தினால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும். காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம், நெடுஞ்சாலை, மாநகராட்சி அலுவலகங்கள், ஆட்சியர், நீதிபதிகள் குடியி ருப்புகள் உட்பட பல்வேறு அரசுத்துறையினர் குடியிருப்புகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த முக்கியச் சாலையாக இருந்தும் இந்த இடத்தின் பிரச்சினை சரிசெய்யப்படாமல் உள்ளது.

காவல்துறையினர், அதிகாரிகள் நினைத்தால் வேறு வழியைப் பயன்படுத்தி சென்று விடலாம். ஆனால் சாமானிய மக்கள் வேறு வழியின்றி இந்த சாலையில்தான் செல்ல வேண்டும். இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் இப்பகுதியில் வாகனங்கள் தடை யின்றி செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

இது குறித்து போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மாரிய ப்பன் கூறுகையில், ‘‘இச்சாலையில் தனியார் வர்த்தக மையம் அருகே சாலையை அகலப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைந்தாலும், 80 சதவீத வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது. எனவே இங்கு சாலையை அகலப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேம்பால கட்டுமான பொறியாளர்களிடம் காவல் துறை சார்பில் பேசியுள்ளோம். அவர்களும் அகலப்படுத்துகிறோம் என உத்தரவாதம் அளித் திருந்தாலும், இதற்கான பணி தாமதமாகிறது. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நெருக்கடியை தவிர்க்க, பிடிஆர் சிலை, வர்த்தக மையம் அருகே போலீஸார் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து தடையின்றி செல்ல உரிய ஏற்பாடுகளை செய்கிறோம். இருப்பினும் வாகன போக்குவரத்து அதிகரிப்பால், அவ்விடத்தில் ஏற்படும் இடையூறை தவிர்க்க, மாட்டுத்தாவணி, மேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளை கோரிப்பாளையத்தில் இருந்து பனகல் சாலை, ஆவின், மேலமடை சந்திப்பு வழியாக திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரிரு நாளில் அந்த இடத்தில் வாகன நெருக்கடி ஓரளவுக்கு குறையும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x