Published : 02 Jul 2021 03:14 AM
Last Updated : 02 Jul 2021 03:14 AM

விழுப்புரம் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மருதூர் ஏரியில் அமைக்க எதிர்ப்பு :

விழுப்புரம்

விழுப்புரம் மருதூரைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பது:

விழுப்புரம் மருதூர் ஏரியை குடிமராமத்து செய்ய வேண்டும். கோலியனூர் வாய்க்கால் மறுசீரமைப்பு செய்து விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என ஏற்கெனவே ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை, நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம்.

தற்போது ஏரியில் பாதாள சாக்கடை திட்டத்தின்படி சுத்திகரிப்பு நிலையம் நிறுவ பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் மருதூர் ஏரியின் நீர்வளம் கெடுவதோடு விவசாய நிலத்தின் மண்வளமும் பாதிக்கப்படும்.

விழுப்புரத்தின் தென்பகுதிகளின் நீர்வளமும் கெட்டுவிடும் சூழ்நிலை உள்ளது.

எனவே பாதாளசாக்கடை திட்டத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை ஊருக்கும், ஏரிக்கும் அப்பாற்பட்ட இடத்தில் நிறுவ வேண்டும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x