Published : 30 Jun 2021 03:15 AM
Last Updated : 30 Jun 2021 03:15 AM

உண்டி உறைவிட பள்ளியில் மாணவர் சேர்க்கை :

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஏகலைவா உண்டி உறைவிட மேல்நிலை பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நாளை முதல்தொடங்கவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலை பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் கூடுதல் மாணவர்களை சேர்க்க பழங்குடியினர் நல இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஏற்கெனவே உள்ள பள்ளி கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லை என்பதால் திருப்பத்தூர் மாவட்டம் லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் ‘ராஜம்மா பெருமாள் எஜிகேஷனல் சேரிடபுள் டிரஸ்ட் திருமால் கல்வியியல் கல்லூரியின்’ வளாகத்தில் உள்ள 2-ம் தளத்தில் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலை பள்ளியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜூலை 1-ம் தேதி) முதல் புதிய இடத்திலும் மாணவர்கள் சேர்க்கை தொடங்குகிறது. எனவே, 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்புகளுக் கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால் மாணவர்கள் பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு திட்ட அலுவலர் 93840-47490, கண்காணிப்பாளர் - 80720-12586 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x