Published : 26 Jun 2021 03:14 AM
Last Updated : 26 Jun 2021 03:14 AM
மீனவ விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைக்க விண்ணப்பிக்க லாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் உள் நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க செய்து மீனவ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் (NADP) 2020-2021-ம் ஆண்டின் கீழ் மானியம் பெற்று கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பு செய்வதற்காக பண்ணைக்குட்டை அமைக்க 1,000 சதுர மீட்டர் மீன் குஞ்சுகள், தீவனம் மற்றும் சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவினங்களுக்கு மீன்வளத் துறை மூலம் 40 சதவீதம் மானியம் வழங்கப்படவுள்ளது.
அதில் ஒரு அலகுக்கு (1,000 சதுர மீட்டர்) அதிக பட்சமாக ரூ.99 ஆயிரம் செலவீனத்தில் 40 சதவீதமாக ரூ.39,600 வரை மானியம் வழங்கப்படும். எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பம் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் இந்த அறிவிப்பு வெளிவந்த ஒரு வாரகாலத்துக் குள்ளாக, எண்:16, 5-வது மேற்கு குறுக்குத்தெரு, காந்தி நகர் மேற்கு, காட்பாடி, வேலூர் மாவட்டம் 632-006 என்ற முகவரியில் இயங்கி வரும் ‘வேலூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு முழு விவரங்களை பெற்று பயன் பெறலாம்.
விண்ணப்பங்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப் படுவார்கள். இது குறித்து தொடர்பு கொள்ள விரும்புவோர் 0416-2240329, 94439-10456 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது adfifvellore1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்’’என தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT