Published : 25 Jun 2021 03:14 AM
Last Updated : 25 Jun 2021 03:14 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - வேளாண் பொறியியல் துறை பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு :

காட்டுச்செல்லூர் கிராம விவசாய நிலத்தில் சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட் அமைக்கும் பணியை பார்வையிடும் ஆட்சியர் பி.என்.தர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர் வட்டார பகுதிகளில் வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்.

கள்ளக்குறிச்சி வட்டாரத்திற்கு உட்பட்ட தண்டலை கிராமத்தில் மாரிமுத்து என்ற விவசாயின் நிலத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மைநவீனமயமாக்கம் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட விவசாய பண்ணைகுட்டையை மாவட்ட ஆட்சியர்என்.தர் நேற்று ஆய்வுசெய்தார். பண்ணை குட்டையில் வளர்க்கப்படும் மீன் இனங்கள் மற்றும்மீன் விற்பனை குறித்து கேட்ட றிந்தார்.

பின்னர், ரிஷிவந்தியம் வட்டாரம் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் கருணாகரன் என்ற விவசாயிக்கு கரும்பு அறுவடை இயந்திரம் வாட கைக்கு வழங்கப்பட்டதை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, காட்டுச்செல்லூர் கிராமத்தில்மாணிக்கம் என்ற விவசாயின் நிலத்தில் சோலார் பம்பு செட் திட்டத்தில் 10 குதிரைத் திறனுள்ள சோலார் பம்பு செட் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படுவதை ஆய்வுசெய்தார். விவசாய பணிக்காக மின் இணைப்பு கோரும் விவசாயிகளுக்கு உடனடித் தேவையாக சோலார் பம்பு செட் திட்டத்தின் கீழ் கிடைத்திட வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர், கீழத்தாழனூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, முதலூர் கிராமத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார். 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x