Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

நுகர்வோரின் விருப்பமின்றி தன்னிச்சையாக - அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் கடும் நடவடிக்கை : கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பாக பொதுமக்களின் நலன் கருதி இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் ரூ. 140 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி கட்டணத்துடன் கூடிய குறைவான கட்டணத்தில் ஒளிபரப்பு செய் யப்பட்டு வரப்படுகிறது.

இதற்கிடையே, உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சிலர் தங்களது சுய லாபத்திற்காக, அரசின் நலத் திட்டத்தை தடுக்கும் வகையில், ‘இனிமேல் அரசு கேபிள் சிக்னல் வராது’ என்று தவறான தகவலை தெரிவித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை வாடிக் கையாளர்களின் விருப்பமின்றி தன்னிச்சையாக மாற்றி, தனியார் நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை பொருத்தி, வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலில் செய்வதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

புகார் தெரிவிக்கலாம்

பொதுமக்களோ அல்லது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களோ தமிழ் நாடு அரசின் சிக்னல் குறித்து அச்சப்பட தேவையில்லை. எவ்வித தடையுமின்றி தொடர்ந்து செயல்படும். மிகக் குறைந்த சந்தா தொகையில் பொதுமக்களுக்கு தரமான சேவையை அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் மட்டுமே தொடர்ந்து வழங்க இயலும்.

பிற கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் வழங்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, நுகர்வோரின் விருப் பமின்றி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால், ‘விழுப்புரம் துணைமேலாளர். தனி வட்டாட்சியர் அலுவலக கைப்பேசி எண் 94980 02597-ல் புகார் தெரிவிக்கலாம்.

புகார்கள் பெறும் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x