Published : 21 Jun 2021 03:15 AM
Last Updated : 21 Jun 2021 03:15 AM
சின்னசேலம் வட்டம் பங்காரம் கிராமத்தில் சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் 75 சதவீத மானி யத்தில் ரூ2,38,000 மதிப்பீட்டில் கீதாலட்சுமி என்ற விவசாயியின் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர் பாசனத்தை ஆட்சியர் பார்வையிட்டார். சொட்டு நீர் பாசனத்தால் ஏற்பட்ட பயன் குறித்தும், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் கனியாமூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு மண் மாதிரி பரிசோதனை தொடர்பாக செயல் விளக்கம் அளிக்கப்படுவதை தொடக்கி வைத்தார். தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி இயக்க திட்டத்தின் சார்பில் கனியாமூர் கிராமத்தில் 100 ஹெக்டேர் மானாவாரி நிலம் தேர்வு செய்யப்பட்டு உழவு பணி மேற்கொள்ளும் விதமாக உழவு பணியினை தொடக்கி வைத்தார்.
இதேபோல் சின்னசேலம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் அமைக்கப்பட் டுள்ள மண் பரிசோதனை நிலையத்தில் மண் மாதிரி பரிசோதனை செய்யப்படுவதை ஆய்வு செய்தார். வாசுதேவனூர் கிராமத்தை சேர்ந்த 11 விவசாயி களுக்கு மண் வள அட்டையினை வழங்கினார். வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா திட்டம்) மூலம் நெல் சாகுபடிக்கு, ரூ.4,000 மானியத்துடன் நேரடி விதை கருவிகளை 2 விவசாயிகளுக்கு வழங்கினார். இதேபோல் இயந்திர நடவு வயல்கள் மற்றும் வரிசை நடவு வயல்களில் களை எடுக்கும் கோனோ வீடர் கருவி ஒரு விவசாயிக்கு தலா 2 கருவிகள் வீதம் ரூ.4,000 மானியத்துடன் 8 விவசாயிகளுக்கு ரூ.32,000 மானியத்தில் நலத்திட்ட உதவி வழங்கினார்.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜெகந்நாதன், உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT