Published : 21 Jun 2021 03:15 AM
Last Updated : 21 Jun 2021 03:15 AM
வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதி களில் அதிமுக தோல்விக்கான காரணங்களை தனி ஆப்ரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்வோம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்துப் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வினர் மெத்தனமாக இருந்ததன் காரணமாக சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவி உள்ளோம். இத்தோல்வி குறித்து தனியாக ஒரு ஆப்ரேஷன் தியேட்டர் கட்டி அங்கு வைத்து ஆய்வு செய்வோம்.
சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தவர், தற்போது அதிமுகவை அபகரிக்கும் நோக்கில் செயல்படுகிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT