Published : 20 Jun 2021 03:13 AM
Last Updated : 20 Jun 2021 03:13 AM

தடுப்பூசி ரகங்களில் குழப்பம் வேண்டாம் :

விழுப்புரம்

கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்பணி கடந்த ஜனவரி மாதம் 16- ம் தேதி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தியதயாரிப்பு என்பதால் கோவாக்ஸின் தடுப்பூசியை செலுத்த ஆர்வம் காட்டினர். தற்போதுகோவிஷீல்டு தடுப்பூசிதான் வேண்டும். அது இல்லை என்றால் கோவாக்ஸினை தவிர்த்து, எப்போது வரும் என கேட்டுக்கொண்டு திரும்பிவிடுகின்றனர் என்ற தகவல் வெளியானது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, " கோவாக்ஸின் செலுத்திகொண்டவர்கள் வெளிநாடு செல்லமுடியாது. கோவிஷீல்டு செலுத்திகொண்டவர்கள்தான் வெளிநாடு செல்லமுடியும் என்ற தகவல் வெளியானதும், வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளவர்கள் அதில் ஆர்வம் காட்டினால் தவறில்லை. இரண்டும் ஒன்றுதான்" என்றனர்.இதுகுறித்துமாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, "மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18.49 லட்சம்பேர் உள்ளனர். இவர்களில் முதல் டோஸ், பூஸ்டர் டோஸ் என 2.17 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. தினமும் 2 வகையான தடுப்பூசிகளும் இருப்பு உள்ளன "என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x