Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளைத் தொடங்க தமிழக அரசு ஒருபோதும் அனும திக்காது என மாநில பிற்படுத்தப் பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் வாரியங் காவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என மாநில சுற்றுச்சூழல் துறைக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. ஒருபோதும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனு மதிக்க முடியாது என தமிழக முதல்வர் ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறார். எனவே, மத்திய அரசு ஹைட்ரோகார்பன் பணிகளை தமிழகத்தில் அனுமதித்தாலும், அதை செயல்படுத்த தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
அரியலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்படும். ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக் கரித் திட்டத்தை தொடங்குவது குறித்து, அரசு உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்றார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கண்டனம்
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்ட மைப்பின் தலைமை ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 15 எண்ணெய்- எரிவாயு மற்றும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணை யத்துக்கு ஓஎன்ஜிசி விண்ணப் பித்துள்ளது. இந்த விண்ணப் பத்தை தமிழக அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும். ஓஎன்ஜிசி மற்றும் எண்ணெய் எரிவாயு எடுக்க முயற்சிக்கும் அத்தனை நிறு வனங்களும் தமிழகத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT