Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM
டாஸ்மாக் மதுபானக்கடையில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், போலி மதுபானம் விற்பனை, சாராயம் மற்றும் வெளிமாநில மதுபான விற்பனையை தடுக்கவே கரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப் பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு குறைந் திருந்தாலும் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், ஒரு மாதத்துக்குப் பிறகு மதுபானக் கடைகள் திறந் திருப்பதால் தட்டுப்பாடு ஏற்படும் சூழலை தவிர்க்கவும் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து, போதுமான இருப்புகளை டாஸ்மாக் மதுபானக்கடைகளில் குவித்து வருகின்றன.
இந்நிலையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செதுக்கரை பொன்னம்பட்டி டாஸ்மாக் மதுபானக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் சீனிவாசன் என்பவர் மதுபாட்டில்கள் மீது கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருவதை வீடியோ எடுத்த சிலர் அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ நேற்று வைரலானது.
இதைத்தொடர்ந்து, வேலூர் டாஸ்மாக் கோட்ட மேலாளர் கீதாராணி இது குறித்து விசாரணை நடத்திய போது, பொன்னம்பட்டி டாஸ்மாக் விற்பனையாளர் சீனிவாசன், ஒவ் வொரு பாட்டில் மீதும் ரூ.5 முதல் ரூ.10 வரை விலையை உயர்த்தி விற்பனை செய்தது உண்மை என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் மதுபாட்டிலை விலை உயர்த்தி விற்பனை செய்த சீனிவாசனை டாஸ்மாக் கோட்ட மேலாளர் கீதாராணி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக கடையின் மேற்பார்வையாளர் குமரன் விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT