Published : 16 Jun 2021 03:13 AM
Last Updated : 16 Jun 2021 03:13 AM

புதுடெல்லியில் சாலை விபத்தில் இறந்த உத்தமபாளையம் வீரர் உடல் இன்று அடக்கம் :

பிரபாகரன்

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ரா.பிரபாகரன் (33). இவர் புதுடெல்லி ராணுவப் பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் பணி முடிந்து நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது பேஸ் ஹாஸ்பிட்டல் கண்ட் எனும் இடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரது உடல் புதுடெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர், ஆம்புலனஸ் மூலம் கம்பத்துக்கு இன்று (புதன்கிழமை) கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது. இவருக்கு திவ்யா (30) என்ற மனைவியும், லோகிதா (8), யுகாசினி(3) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x