Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM
கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர் வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி வரும்21 மற்றும் 25-ம் தேதி முதல் கீழ்காணும் வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.
வருவாய் தீர்வாய அலுவலர்கள் விவரம்:
கள்ளக்குறிச்சி - மாவட்ட ஆட்சியர். கல்வராயன்மலை - மாவட்ட வருவாய் அலுவலர். சின்னசேலம் - மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்). உளுந்தூர்பேட்டை - மாவட்ட வழங்கல் அலுவலர். சங்கராபுரம் - உதவி ஆணையர் (கலால்) மற்றும் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு). திருக்கோவிலூர் - திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் இம்மாதம் 25-ம் தேதி முதல் துவங்கவுள்ளது. கீழ்காணும் வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.
வருவாய் தீர்வாய அலுவலர்கள் விவரம்:
விக்கிரவாண்டி - மாவட்ட ஆட்சியர். மரக்காணம் - கூடுதல் ஆட்சியர் (வருவாய்). விழுப்புரம் - மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர். வானூர் - தனித்துணை ஆட்சியர். கண்டாச்சிபுரம் - விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர். திருவெண்ணெய்நல்லூர் - உதவி ஆணையர் (கலால்). திண்டிவனம் - மாவட்ட வழங்கல் மற்றும் நுகாவோர் பாதுகாப்பு அலுவலர். செஞ்சி - வடிப்பக அலுவலர் ராஜ் சுகர்ஸ் லிமிடேட், செம்மேடு. மேல்மலையனூர் - திண்டிவனம் சார்-ஆட்சியர்.
தற்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை பெறப்படுவது தவிர்க்கப் பட்டுள்ளதால்,
பொதுமக்கள் இம்மாதம் 10-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை இணையதளம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக மட்டுமே மனுக்கள் அனுப்ப வேண்டும். ஆகையால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டாம். கீழ்காணும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு: https://gdp.tn.gov.in/jamabandhi.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு: கள்ளக்குறிச்சி - kaltaluk@gmail.com. கல்வராயன்மலை - tahsildarkhills@gmail.com. சின்னசேலம் - chinnasalemtk@gmail.com.உளுந்தூர்பேட்டை - ulutaluk2012 @gmail.com. சங்கராபுரம் - ahsildarspm@gmail.com. திருக்கோவிலூர் - tirtaluk.tnvpm@nic.in.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT