Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி வேகமெடுக்கத் தொடங்கி யிருக்கிறது. இந்த மருத்துவமனை வந்தால் தென் மாவட்ட மக்களின் மருத்துவத்துக்கும், பொருளாதார உயர்வுக்கும் வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைக்க கடந்த 2015-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி 2019 ஜனவரி 27-ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று உறுதி யளிக்கப்பட்டது.
ஆனால் ஜப்பானிடம் கடன் பெறுவதற்கு மத்திய அரசு 2021-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி அந்நா ட்டுடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால், நிதி ஒதுக்கப்படாததால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி தொடங்குவது தாமதமானது. அதனால் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தினர்.
தென்காசி மாவட்டம், பாவூர் சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் மதுரை எய்ம்ஸ் சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதன் தற்போதைய நிலை யை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடந்த 5-ம் தேதி கடிதம் எழுதிய கடிதத்தில், தற்காலிக கட்டிடத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டே தொடங்க வேண்டும், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி களை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ் நேற்று முன்தினம் திருப்பதியில் கூறும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த ஆண்டு இறுதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்படும், கட்டு மானப் பணி இரண்டு மாதங்களில் தொடங்கப்படும் என்று கூறினார்.
இதையடுத்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனை அல்லது மதுரையில் உள்ள தனியார் மருத்து வமனை யில் எய்ம்ஸ் மருத்துவமனையை தற்காலிகமாகத் தொடங்க ஆலோ சனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,264 கோடிக்கு மட்டுமே ஒப்பு தல் வழங்கியிருந்தது. தற்போது திட்ட மதிப்பீடு ரூ.2000 கோடி வரை உயரும் வாய்ப்பு உள்ளது. திட்ட மதிப்பீடு உயர்வு அரசின் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப் படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT