Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM
இன்னும் 10 நாட்களில் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறும் என்று அமைச் சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரி வித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப் பத்தூர் பிரபாகர் காலனியில் வருவாய்த்துறை சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். பொதுமக்களுக்கு தலா 10 கிலோ அரிசி தொகுப்பை வழங்கி அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: முதல்வர் உத்தரவின்பேரில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கரோனா தடுப்புப் பணிக்காக சென்றேன். அங்கு கரோனா பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையிலான நிர்வாகத்தால் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் 10 நாட்களில் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறும்.
மக்கள் அதிக அளவில் பொது இடங்களில் நடமாடுவதால்தான் கரோனா பரவல் அதிகரிக்கிறது. எனவே மக்கள் பொருளாதாரப் பாதிப்பை பொறுத்துக் கொண்டு, தங்கள் நலனுக்காக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று தெரி வித்தார்.
நிகழ்ச்சியில் ஆர்டிஓ சுரேந் திரன், வட்டாட்சியர் ஜெயந்தி, ஒன்றியக் குழுத் தலைவர் சண்முக வடிவேல், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment