Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி :

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவன் அருள் முன்னிலையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்ற அலுவலர்கள்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ‘குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்கம்’ சார்பில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உறுதிமொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலர் கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண் டனர்.

இதைத்தொடர்ந்து, திருப்பத் தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் போன்ற வணிக நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 குழந்தை தொழிலாளர் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தைகளின் குடும்பங் களுக்கு திருப்பத்தூர் குழந்தை கள் தத்தெடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொண்டு நிறுவனமான எஸ்ஆர்டிபிஎஸ் சார்பில் ரூ.1,000 மதிப்பிலான சமையல், மளிகைப்பொருட்களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், குழந்தை தொழிலாளர் நல் வாழ்வு இயக்க மாவட்ட மேலாளர் செந்தில்குமார், துணை ஆட்சியர்கள் விஜயன், லட்சுமி, முருகானந்தன், கிருஷ்ணமூர்த்தி, பானுமதி, எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x