Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM
கரோனா வைரஸ் தடுப்பு பணிகுறித்த ஆய்வுக் கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் பேசியதாவது:
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாடகைவாகனங்கள், வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள்இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். வாடகை கார்களில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும். விதிகளுக்கு மாறாகபயணிக்கும் வாகனங்கள் காவல்துறை மூலம் பறிமுதல் செய்யப்படும். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான குற்றாலம் பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தற்போது எவ்வித தளர்வுகளும் வழங்கப்படவில்லை. அவசர காரணங்களுக்காக ஆட்சியரிடம் இருந்து இ -பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டும். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மீறி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும். இதனை கண்காணிக்க 13 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி, மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் யோகானந்த், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் அமிர்தராஜ் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT