Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM
முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய் ததாக அவரது உதவியாளர் கொடுத்த புகாரின் பேரில், திருப் பத்தூர் டிஎஸ்பி-க்கள் தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் தொழி லாளர் நலத்துறை அமைச்சரு மான நிலோபர்கபீல், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.6 கோடி வரை பணம் மோசடி செய்துள்ளதாக அவரது தனி உதவியாளரான பிரகாசம் என்பவர் தமிழக டிஜிபிக்கு கடந்த மாதம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இதைத்தொடர்ந்து, அதிமுக வின் அனைத்து பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவரை கட்சி தலைமை நீக்கியது. இதற்கு பதிலளித்த நிலோபர் கபீல், தன் மீது சுமத்தப்பட்டது வீண் பழி என்றும், நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. ஒரு வேளை பிரகாசம் வாங்கியிருப்பார், தற்போது அவர் சிலரது தூண்டுதல் பேரில் என் மீது பொய்யான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதை தான் சட்ட ரீதியாக சந்திப்பேன் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் மீது அவரது உதவியாளர் கொடுத்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக டிஜிபி திரிபாதி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமாருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நிலோபர்கபீலிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் அவரது உதவியாளர் பிரகாசம் வழங்கிய பட்டியல் படி 108 பேரிடம் விசாரணை நடத்த துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரவீன்குமார் (திருப்பத்தூர்), சச்சிதானந்தம் (ஆம்பூர்) ஆகியோர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் 108 பேரிடம் நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இது குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புகாரின் அடிப்படையில் 108 பேருக்கு சம்மன் அனுப்பி அவர்களை தேதி வாரியாக வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை 35 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் அதன் அறிக்கையை திருப்பத்தூர் எஸ்பி மூலம் தமிழக டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்படும். விசாரணை பாதிக்கும் என்பதால் இதற்கு மேல் எதுவுமே கூற முடியாது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment