Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM
முழு ஊரடங்கால் மதுரை நகரில் மே மாதம் ஒருவர் கூட விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களும் வெகுவாக குறைந்துள்ளதாக காவல்துறை யினர் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் வாகனங்களின் பெருக்கத்தால், கடந்த காலத்தில் தினமும் விபத்துகள் தவிர்க்க முடியாததாகஇருந்தது. மேலூர், திண்டுக்கல், திருமங்கலம் நான்குவழிச் சாலை களில் அடிக்கடி விபத்துகள் நடந் தன.
அதிவேகம், போக்குவரத்து விதிகளை மதிக்காதது, ஷேர் ஆட் டோக்கள் எல்லா இடங்களிலும் நிறுத்தி ஆட்களை ஏற்றுவது போன்ற பல்வேறு காரணங்கள் விபத்து அதிகரிக்க காரணமாக இருந்தன.
பெரும்பாலும், நான்குவழிச் சாலைகளில் அதிகாலையில் நிகழும் விபத்துகளுக்கு நீண்ட தூரம் ஓய்வின்றி வாகனங்களை ஓட்டி வந்ததுதான் காரணம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கை யொட்டி மே மாதத்தில் விபத்து உயிரிழப்பு ஒன்றுகூட நிகழவில்லை. மேலும் பிற குற்றச் சம்பவங்களும் குறைந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறி யதாவது: மக்கள் நெருக்கடி, குறுகிய சாலைகள், வாகன பெருக்கத்தால் மதுரை நகரில் ஒவ்வொரு மாதமும் 8 முதல் 10 விபத்து மரணங்களும், ஆண் டுக்கு 180 முதல் 200 பேரும் உயிரிழக்கின்றனர்.
கோடை விடுமுறை மாதங்க ளான ஏப்ரல், மே, ஜூனில் சுற்றுலா பயணிகளின் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பால் இரு மாதங்களிலும் சற்று கூடு தலாக விபத்துகள் நடக்க வாய்ப்பு இருக்கும்.
ஆனால், கடந்த மே மாதம் முதலே இரவு 10 முதல் அதிகாலை 4 மணி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தொடர்ந்து 24-ம் தேதி முதல் தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருப்பதால் கடந்த மாதத்தில் ஒருவர் கூட விபத்தில் உயிரிழக்கவில்லை.
கடந்த ஏப்ரலில் விபத்துகளில் 5 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர். 25 பைக் திருட் டுச் சம்பவம், 6 சங்கிலி பறிப்பு, 12 கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன.
ஆனால், மே மாதத்தில் ஒரு விபத்து மரணமும் நடக்கவில்லை. ஆனால் விபத்துகளில் 15 பேர் வரை காயமடைந்தனர்.
25 பைக் திருட்டுச் சம்பவம், 3 சங்கிலி பறிப்பு, 8 கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன என் றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT