Published : 31 May 2021 03:13 AM
Last Updated : 31 May 2021 03:13 AM
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 100 படுக்கை வசதிகளை ஏற்படுத் தும்படி கரோனா கட்டுப்பாட்டு அறை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தரேஸ் அகமது தெரி வித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு அறையை, மாநில கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய நலக்குழும திட்ட இயக்குநர் டாக்டர் தரேஸ் அகமது ஆய்வு செய்தார். அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளின் விவரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்து அதனடிப்படையில் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கையை மேலும் 100 படுக்கை வசதியை கூடுதலாக்கவும், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் கூடுதலாக 400 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை உருவாக்கவும் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குநர் (மருத்துவம்) சித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT