Published : 23 May 2021 05:51 AM
Last Updated : 23 May 2021 05:51 AM

ஊரடங்கு காலத்தில் - ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் தம்பதி :

நாமக்கல்

ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றர்களுக்கு குமாரபாளையத்தைச் சேர்ந்த தம்பதி, இரவு வேளையில் உணவு வழங்கி உதவி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பலர் வேலைவாய்ப்பை இழந்து அன்றாடம் வாழ்க்கை நடத்துவற்கே பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதுபோல சாலையோரத்தில் யாசகம் பெற்று ஜீவனம் நடத்துபவர்களும் உணவின்றி பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், தன்னார்வலர்கள் உணவு உள்ளிட்டவைகளை வழங்கி உதவி வருகின்றனர். இதில், சாலையோரங்களில் யாசகம் பெறுபவர்களில் பெரும்பாலானோருக்கு இரவு நேர உணவு கிடைப்பதில்லை.

இதை அறிந்த குமாரபாளையம் ஆனங்கூர் சாலையைச் சேர்ந்த சீனிவாசராகவன் (48), சவுண்டேஸ்வரி (39) தம்பதி ஆதரவற்றவர்களுக்கு இரவு நேரத்தில் உணவு வழங்கி ஆதரவற்றவர்களின் பசியை போக்கி வருகின்றனர்.

இவர்கள் குமாரபாளையம் பேருந்து நிலையம், பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, காவேரி நகர் என நகரின் பல்வேறு பகுதியில் யாசகம் பெறுவோர், ஆதரவற்றவர்களை தேடிச் சென்று இரவு நேர உணவு வழங்கி வருகின்றனர்.

இதுதொடர்பாக சீனிவாசராகவன், சவுண்டேஸ்வரி ஆகியோர் கூறும்போது, “சாலையோரம் யாசகம் பெறுவோர் இந்த ஊரடங்கு காலத்தில் உணவுக்கு பெரும் சிரமப்படுகின்றனர்.

பகல் வேளையில் யாராவது உணவு அளித்துவிடுகின்றனர். ஆனால், இரவு வேளைகளில் யாரும் இவர்களை கவனிப்ப தில்லை.

எனவே இரவு வேளையில் இவர்களுக்கு உணவளிக்கிறோம். தவிர, முகக் கவசமும் வழங்கி கரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x