Published : 23 May 2021 05:52 AM
Last Updated : 23 May 2021 05:52 AM

நாளை முதல் ஒரு வாரம் தளர்வில்லா ஊரடங்கு அமல் - கடைகளில் குவிந்த பொதுமக்கள் :

திருச்சி மேலரண் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கனி மார்க்கெட்டில் நேற்று காய்கனிகள் வாங்க குவிந்திருந்த மக்களில் ஒரு பகுதியினர்.

திருச்சி/ கரூர்

தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், 2 நாட்கள் கட்டுப்பா டுகள் தளர்த்தப்பட்டதால் நேற்று அனைத்துக் கடைகளும் திறக்கப் பட்டு, பொருட்கள் வாங்க பொது மக்கள் அதிகளவில் குவிந்தனர்.

தமிழகத்தில் நாளை(மே 24) முதல் ஒரு வாரத்துக்கு தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், நேற்றும், இன்றும் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதை யடுத்து, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக் கப்படுவதை ஆட்சியர் சு.சிவராசு நேற்று மாலை ஆய்வு செய்தார்.

அப்போது, செய்தியாளர் களிடம் அவர் கூறியது: தமிழத்தில் மே 24-ம் தேதி(நாளை) காலை 6 மணி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு உதவும் நோக்கில் 2 நாட்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, திருச்சி மாவட்டத் தில் 18 விரைவுப் பேருந்துக ளும், 16 நகரப் பேருந்துகளும் இயக்கத்துக்கு வந்துள்ளன. பயணிகள் வருகை குறைவாக இருந்தாலும் மக்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக உடன டியாக பேருந்து சேவை ஏற்படுத் தப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்ற தகவல் பரவியதால், திருச்சி மேலரண் சாலையில் உள்ள தற்காலிக காய்கனி மார்க்கெட்டில் நேற்று காலையில் காய்கனிகள் வாங்க அதிகளவில் மக்கள் குவிந்திருந்தனர். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களில் பெரும் பாலானோர் முகக்கவசம் அணிந் திருந்தாலும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இதேபோல, இறைச்சிக் கடை களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதற்கிடையே, நாளை(மே 24) முதல் ஒரு வாரத்துக்கு தளர்வு களற்ற ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு, முன்னதாக 2 நாட்களுக்கு(நேற்றும், இன்றும்) மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக நேற்று பிற்பகல் அறிவிப்பு வெளியிட்டது. இதை யடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜவுளிக் கடைகள், இரும்புக் கடைகள், பிளாஸ்டிக் கடைகள், மளிகைக் கடைகள், பலசரக்குக் கடைகள், சலூன்கள் என அனைத்து வகையான கடை களும் நேற்று மாலை திறக்கப் பட்டன. நாளை முதல் தளர்வு களற்ற ஊரடங்கில் கடைகள் எதுவும் திறக்கப்படாது என்பதால், நேற்று அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கரூர் மாவட்டத்தில்...

ஊரடங்கில் 2 நாட்கள் தளர்வு அறிவித்ததையடுத்து, கரூரில் ஜவுளி, நகை, மளிகை, பேக்கரி, சலூன்கள், மார்க்கெட், பழக்கடை, டீக்கடை உள்ளிட்டவை நேற்று திறக்கப்பட்டன. மளிகைக் கடைகள் முன்பு ஏராளமானோர் வரிசையில் நின்று பொருட்களை வாங்கினர். காமராஜ் மார்க்கெட்டில் மக்கள் அதிகளவில் குவிந்தனர்.

கரூர் பேருந்து நிலையத்தில் திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல 16-க்கும் மேற்பட்ட பேருந்துகள் காத்திருந்தன. குறைந்தளவு பயணிகளே வந்ததால் திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. பயணிகள் வருகையை பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிக ரிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x