Published : 17 May 2021 03:15 AM
Last Updated : 17 May 2021 03:15 AM
வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் மற்றும் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப் பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகி யோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 2 பேரும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வரு கிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 600-ஐ கடந்து வருகிறது. வேலூரில் மாநகராட்சிப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகமாக காணப் படுகிறது. இதனால் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் நோய் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப் பட்டு வருகின்றன.
நேற்று ஒரே நாளில் 643 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்புப்பணிகளில் தீவிர மாக ஈடுபட்டு வந்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு கரோனா தொற்று நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வீட்டில் பணியாற்றி வரும் பெண் ணுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தன்னைத்தானே வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டார்.
இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில், மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்துக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
எம்எல்ஏவுக்கும் தொற்று உறுதி
அதேபோல், அணைக்கட்டு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மத்திய மாவட்டச் செயலாளருமான ஏ.பி.நந்தகுமாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏ நந்தகுமார் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT