Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையிலும், இம்மாதம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 நிவாரணம் முதல் தவணையாக வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள் 796 ரேஷன் கடைகள் மூலமாக இத்தொகை வழங்கப்படவுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அதிகஎண்ணிக்கையில் ரேஷன் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகள் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது. ரேஷன் பணியாளர்கள் மூலம் வழங்கப்படும் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில், பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டையை எடுத்துச்சென்று, நிவாரண உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 658 நியாயவிலை கடைகளில் 4,40,846 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையான ரூ.2,000 நிவாரண தொகை வழங்கப்படவுள்ளது. வரும் 15-ம் தேதி முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நியாய விலைக்கடைகளில் உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT