Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM
வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மே 10-ம் தேதி (இன்று) முதல் மே 24-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப் பட்டுள்ளதால் வசதியற்ற மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.
இந்நிலையில், வேலூர் அடுத்த அரியூர், புரம், திருமலைக்கோடி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு புரம் மற்றும் நாராயணி பீடம் சார்பில் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப்பொருட் களை சக்தி அம்மா வழங்கினார். அப்போது, புரம் பொற் கோயில் இயக்குநரும் அறங்காவலருமான சுரேஷ் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT