Published : 09 May 2021 03:16 AM
Last Updated : 09 May 2021 03:16 AM
கும்பகோணம் கோட்டத்துக்குட் பட்ட 6 மண்டலங்களில் 1,232 நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் ஆர்.பொன்முடி தெரிவித்தார். அரசின் இந்த அறிவிப்பால், கிராமப்புற பெண்கள், கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருளா தார ரீதியாக மேம்பட வாய்ப்புள்ளதாக பெண் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு நகரப் பேருந்துகளில் மகளி ருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக் கப்பட்டிருந்தது. அதன்படி இத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தமிழக முதல்வராக பதவியேற்ற நாளிலேயே இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து உடனடியாக இதற்கான அரசாணை பிறப்பிக்கப் பட்டு, மே.8-ம் தேதி முதல் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் எனவும், இதன்மூலம் போக்குவரத்துக் கழகங்க ளுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான ரூ.1,200 கோடியை, அரசு மானியமாக வழங்கி ஈடுகட்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
1,232 நகரப் பேருந்துகளில் அனுமதி
அதன்படி, கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்சி மண்டலத்தில்(திருச்சி, அரியலூர், பெரம்பலூர்) 415, கரூர் மண்டலத்தில் 129, புதுக்கோட்டை மண்டலத் தில் 139, காரைக்குடி மண்டலத்தில் 219, நாகப்பட்டினம் மண்டலத்தில் 117, கும்பகோணம்(தஞ்சாவூர், திருவாரூர்) மண்டலத்தில் 213 என 1,232 நகரப் பேருந்துகளில் நேற்று மகளிருக்கு கட்டணமில்லா பய ணம் அனுமதிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் இயக்கக்கூடிய 25 எல்.எஸ்.எஸ் பேருந்துகளில் மட்டும் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
வாக்குவாதம் செய்யக்கூடாது
மகளிர் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அப்பேருந்துகளின் முன்புற கண்ணாடியில் ‘மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் சிறுமிகள் தொடங்கி மூதாட்டிகள் வரை அனைத்து பெண் பயணிகளையும் பேருந்து களில் இலவசமாக ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும், இதுதொடர்பாக எவ்விடத்திலும், எவ்விதமான வாக்குவாதங்களும் நடைபெறாத வகையில் நடந்து கொள்ளுமாறும் அனைத்து நடத்துநர்களுக்கும் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் ஆர்.பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.இதை நடைமுறைப்படுத்த அதிகாரி கள் குழுவினரும் ஆங்காங்கே தணிக்கையில் ஈடுபட்டனர்.
மாதம் ரூ.2,200 மிச்சமாகும்
இதுகுறித்து திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணிபுரியும் எம்.ராஜ பேரிகை என்பவர் கூறும்போது, ‘‘திருச்சி அரியமங்கலத்தில் வசிக் கும் நான், வீட்டிலிருந்து மண்டையூர் அருகேயுள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த 13 ஆண்டு களாக தினமும் பேருந்தில் சென்று பணிபுரிந்து வருகிறேன். அரியமங்கலத்திலிருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால் அரிய மங்கலத்திலிருந்து பால்பண்ணை ரவுண்டானா வரை ஒரு பேருந் திலும், அங்கிருந்து டிவிஎஸ் டோல்கேட் வரை மற்றொரு பேருந்தி லும், அதன்பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இன்னொரு பேருந்திலும் என 3 பேருந்துகளில் பயணம் செய்வேன். இதனால் நான் வாங்கும் ஊதியத்தில் பேருந்து கட்டணமாக மட்டும் மாதத்துக்கு சுமார் ரூ.2,200 செலவிட வேண்டி யிருக்கும். இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவு மூலம் அந்த தொகை எனக்கு மிச்ச மாயிருக்கிறது. எனது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த தொகை பேருதவியாக இருக்கும்’’ என்றார்.
அரசுக்கு நன்றி
திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் பிரிவில் பணியாற்றும் அம்சவள்ளி என்பவர் கூறும்போது, ‘‘திருவெறும்பூர் அருகிலுள்ள வேங் கூரிலிருந்து தினமும் பேருந்து மூலம் தனியார் மருத்துவமனைக்கு பணிக்கு வருகிறேன். எனக்கு மாதம் ரூ.8 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் பேருந்துக்காக மட்டும் மாதம் சுமார் 1,200 ரூபாயை செலவிட வேண்டி யிருந்தது. இதனால் மிகுந்த நெருக்கடியுடன் குடும்பம் நடத்தி வரும் நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பால் மாதம் 1,200 ரூபாய்க்கு மேல் மிச்சமாகும். இதைக் கொண்டு மாதத்துக்கான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். இத்திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி’’ என்றார்.
பொருளாதார நிலை மேம்படும்
துவாக்குடி அருகேயுள்ள மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனி யார் பள்ளி ஆசிரியை ஆலிஸ் சகாயராணி கூறும்போது, ‘‘திருச்சியிலுள்ள தனியார் பள்ளியில் பணி புரிந்து வரும் நான், வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று வர பேருந்து கட்டணமாக நாளொன்றுக்கு ரூ.60 செலவிட்டு வந்தேன். என்னைப் போலவே எங்கள் பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் கட்டிட வேலை, உணவக வேலை, வீட்டு வேலைக்காக தினமும் திருச்சிக்கு பேருந்தில் பயணம் செய்கிறார்கள். அவர்களிடம் பயணச் சீட்டுக்குகூட பணமிருக்காது என்பதால், சில நாட்கள் வேலைக்குகூட செல்ல முடியாத நிலை இருந்தது. எங்கள் அனைவருக்குமே இது மகிழ்ச்சி அளிக்கிறது.கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்று பணிபுரியும் எங்களைப் போன்ற பெண்களுக்கு, குறிப்பாக கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்பாட்டுக்கு இத்திட்டம் வழிவகுக்கும்’’ என்றார்.
பெண்கள் மகிழ்ச்சி
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடியவர்களில் 40 சதவீதம் பேர் வேலைக்குச் செல்லக்கூடிய பெண்களே. அவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயணச்சீட்டு தேவையில்லை என்பதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேருந்துகளில் பயணித்ததை முதல்நாளிலேயே காண முடிந்தது’’ என்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT