Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM
தமிழக முதல்வராக மு.க.ஸ்டா லின் பொறுப்பேற்றுள்ள நிலையில்,தமிழினம் கல்வி, பொருளா தாரத்தில் முன்னேற்றம் கண்டிட திமுக ஆட்சிக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப் பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு விஐடி வேந்தரும் தமிழியக்க நிறுவன தலைவருமான கோ.விசுவநாதன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘அரசியலில் ஐம்பதாண்டு அயராத உழைப்பு, மிசா நெருக்கடி கால சிறை வாசம், திராவிட இயக்க கொள்கைகளில் பற்றுறுதி, தேர் வடமாக அறிவாலயத்திலிருந்து புறப்பட்ட திராவிட தேராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி கோட் டையை சென்றடைந்திருக்கிறார்.
2021 தமிழக சட்டபேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்.
தந்தை பெரியார்கண்ட சீர்திருத்தக் கனவுகளை நனவாக்கிய பேரறிஞர் அண்ணா, தமிழை செம்மொழி சிம்மாசனத்தில் அமர்த்திய சமத்துவபுர நாயகர்கலைஞர் உட்பட திராவிட இயக்க முன்னோடிகள் பாதங்களால் போட்ட பாதையில், முதல்வர் பொறுப்பில் மு.க.ஸ்டாலின் பயணம் தொடர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சமூகநீதி காக்கப்பட்டு தமிழினம்கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டிட அமையும்திமுக ஆட்சி செம்மாந்த நடைபோட வாழ்த்துகின்றோம். கரோனா மக்களை தாக்கி வீழ்த்தி விடாமல் காப்பரணாக இந்தியாவுக்கே உயிர்க்காற்று வழங்கும் தமிழகம் எனக் காலம் கணிக்கும் வண்ணம் உயிர்க்கவசமாக எதிர்வரும் ஆட்சி அமையட்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT