Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்காக 1700 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத் தப்படும் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி டீன் எம்.அல்லி, மருத்துவமனை கண் காணிப்பாளர் ஜவஹர்லால், மூத்த மருத்துவர்கள் மலையரசு, ஞானக்குமார் உள்ளிட்ட மருத் துவர்கள் உடனிருந்தனர்.
அதன்பின் ஆட்சியர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 1,227 பேருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 70,689 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நோய்த்தொற் றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600-ம், பரமக்குடி அரசு மருத்துவ மனையில் 200-ம், முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 200-ம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500-ம் என மொத்தம் 1,500 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதி ஒரு வார காலத்துக்குள் ஏற்படுத்தப்படும். இவற்றில் 200 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஆகும். இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த ஆக்சி ஜன் படுக்கை வசதிகளின் எண் ணிக்கை 1700 ஆக உயர்த்தப் படும். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
பாதிப்பு உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் மற்றும் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT